Author: | Rajesh Kumar | ISBN: | 9789386583789 |
Publisher: | Pustaka Digital Media Pvt. Ltd., | Publication: | March 27, 2018 |
Imprint: | Pustaka Digital Media | Language: | Tamil |
Author: | Rajesh Kumar |
ISBN: | 9789386583789 |
Publisher: | Pustaka Digital Media Pvt. Ltd., |
Publication: | March 27, 2018 |
Imprint: | Pustaka Digital Media |
Language: | Tamil |
'ஊசி முனையில் உஷா' இந்த நாவலின் நாயகி உஷாதான். வாழ்க்கையில் எல்லாப் பெண்களுக்கும் பிரச்னை வரும். துணிச்சலாக பெண்கள் மட்டுமே அந்தப் பிரச்னைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவார்கள். பிரச்னையின் தாக்கம் பெண்ணுக்கு பெண் மாறுபடும். ஆனால், நம் கதையின் நாயகி உஷாவுக்கு வந்த பிரச்னை ஒரு 100 பெண்களுக்கு ஏற்படும் ஒட்டு மொத்த பிரச்னை. சுற்றிலும் புலி, சிங்கம், சிறுத்தை, வேங்கை, நரி என்று ஒரு மிருகக்கும்பல். அதன் மையத்தில் மருண்ட பார்வையோடு இளமானாய் உஷா. அந்த இளமான் எப்படி தப்பித்து தன் இருப்பிடத்திற்கு பாதுகாப்பாய் போய் சேர்கிறது என்பதே ஊசி முனையில் உஷா கதை. இந்தக் கதையில் வரும் குணா என்கிற கதாபாத்திரம் உஷாவைப்பற்றி சொல்லும் போது "உஷா மற்ற பெண்கள் மாதிரி கிடையாது. அவ ஒரு விஷயத்தை தப்புன்னு தீர்மானம் பண்ணிட்டா அதை அதுக்கப்புறம் நினைச்சுக்கூட பார்க்கமாட்டா. அவளுக்கு சரின்னு பட்ட விஷயத்தை சாதிக்காமலும் விடமாட்டா. அவ வயித்துல இப்போ ஒரு கரு துளிர்விட்டிருக்கு. இன்னும் ஒரு பத்து மாசகாலத்துக்கு அவள் எனக்கு காதலி கிடையாது. ஒரு உயிர்க்குத் தாய்" என்று சொல்லும் போது உஷா எப்பேர்ப்பட்ட பெண் என்கிற உண்மை படிக்கிற வாசகர்களுக்குப் புரியும்.
- ராஜேஷ்குமார்