Author: | Naveena Alexander | ISBN: | 1230001951752 |
Publisher: | Andhazdhi | Publication: | October 5, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Naveena Alexander |
ISBN: | 1230001951752 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 5, 2017 |
Imprint: | |
Language: | English |
வரலாற்று ஆய்வாளர்களுக்கு, தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு என்று பலருக்கும் எகிப்திய நாகரீகம் ஒரு கடல் போன்றது. அதில் முடிந்தவரை நீந்திக் கரை சேரப் பார்க்கலாம் நண்பர்களே. ஒரு ஊருல ஒரு ராசா இருந்தாராம் அப்படின்னு ஆரம்பிச்சா இன்றைக்குக் குழந்தைகள் கூடக் கேட்கமாட்டார்கள். ஆகையால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவாரசியமான விசயங்களைப் பிய்த்துப்போட்டு அவைகளைப் பின்பற்றி ஒரு முழுமையான எகிப்திய நாகரீகம் குறித்த அறிமுகத்தை எழுத முயற்சி செய்கிறேன்.
எகிப்திய வரலாறு குறித்துத் தமிழில் அவ்வளவாகப் புத்தகங்கள் இல்லை என்று சொன்னால் அது வரலாற்று பிழையாகிவிடப் போவதில்லை. அதை மனதில் கொண்டு முகநூலில் எகிப்து குறித்துக் கட்டுரைத் தொடர் ஒன்று எழுதலாம் என்று முடிவு செய்து எழுதத் தொடங்கினேன். முதல் தொடரிலிருந்தே மிகுந்த வரவேற்பு. அடுத்தடுத்த தொடர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. தொடக்கத்திலேயே இதைப் புத்தகமாகக் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என்று படித்தவர்களும் நண்பர்களும் அன்புக் கட்டளை இடத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட 30 தொடர்களைக் கடந்த பிறகு அதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்கினேன். இந்த முயற்சியில் எனக்கு மிகவும் உதவியாக இருந்த நண்பர் அன்சாரி முகம்மது அவர்கள்.
இது புத்தகமாக வந்தால் உண்மையிலேயே பெரு மகிழ்ச்சி அடையக் கூடிய நண்பர்கள் கார்த்திக்கும், ஜமால் முகமதும். அவர்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சியும்.