Author: | Naveena Alexander | ISBN: | 1230001951868 |
Publisher: | Andhazdhi | Publication: | October 5, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Naveena Alexander |
ISBN: | 1230001951868 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 5, 2017 |
Imprint: | |
Language: | English |
உலகச் சினிமா குறித்த பத்தோடு ஒன்று பதினோராவது புத்தகமாக இருக்கும் போல இது என்று கடந்துபோய் விடுவதாக இருந்தால் அது உங்களின் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாதுதான். ஆனால் நீங்கள் கடந்து செல்வதற்கு முன்பாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன் இது உலகச் சினிமாக்களின் பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டு அவைகளின் கதை மற்றும் கதாப்பாத்திரங்களை குறித்து மணிக் கணக்கில் வம்பளக்கும் புத்தகம் கிடையாது. பின்ன இன்னாவாம் இது? என்றால்….அவசரம் வேண்டாம். பொறுக்கவும்.
நல்ல உலகச் சினிமாக்களை அடையாளம் காணக் கதையும் கதாபாத்திர விளக்கங்கள் மாத்திரம் போதுமானது என்கிற மூட நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுவதுதான் இந்தப் புத்தகம். கதையும், கதாபாத்திர விளக்கங்களும் நல்ல திரைப்படங்களை இனம் காண அரை சதவிகிதம் மாத்திரமே உதவக் கூடும். மீறி அரை சதவிகிதத்தைக் காக்கைக்கு உணவாக வைத்துவிட முடியாதுதானே. சாமானியச் சினிமா இரசிகனின் கண்களுக்குக் காணாமல் மறைந்து கிடக்கும் மீதி அரை சதவிகிதத் திரை மறைவு திரைக்கதை தொழில் நுட்பம் குறித்துப் பேசுவதே இந்தப் புத்தகம்.
திரைக்கதை தொழில் நுட்பம் குறித்து அதுலாம் ஏற்கனவே பல புத்தகங்கள் வெளிவந்துவிட்டது நீ ஒன்றும் புதிதாகச் சொல்வதற்கு இங்கு ஒன்றுமில்லை என்று மீண்டும் அவசரம் காட்டுவதாக இருந்தால் மீண்டும் ஒருமுறை பொறுக்கவும். திரைக்கதை தொழில் நுட்பத்தில் பளிச்சென்று கண்களுக்குப் புலப்படக் கூடிய திரி ஆக்ட் (கிளாசிக்கள்) ஸ்டிரக்சர் குறித்த புத்தகங்களை வேண்டுமானால் திரும்பத் திரும்ப நீங்கள் காண, வாசிக்க நேர்ந்திருக்கும். இது திரைக்கதை தொழில் நுட்பத்தின் மற்றொரு வகையான மினிமலிச திரைக்கதை அமைப்பைக் குறித்துச் சற்றே விரிவாகப் பேசக் கூடியது.
அது என்ன சற்றே என்றால். சற்றேதான். சற்றே விரிவாக. திரைக்கதை என்றவுடன் அதன் தொழில் நுட்பக் கூறுகளில் மாத்திரம் கவனம் செலுத்தாமல் அதன் அடிப்படையாக இருக்கும் கதை குறித்தும் இந்தப் புத்தகத்தில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இதன் முதல் பகுதி முழுவதும் கதை என்கிற எழுத்து இலக்கியத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கதை என்பதை வெறும் வாசிப்பு அனுபவமாக அணுகுவதை விட அதை அறிவியல் விமர்சன ரீதியில் எப்படி அணுகுவது என்பது விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.