Author: | Varshini Tripura, Naveena Alexander | ISBN: | 1230001951844 |
Publisher: | Andhazdhi | Publication: | October 5, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Varshini Tripura, Naveena Alexander |
ISBN: | 1230001951844 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 5, 2017 |
Imprint: | |
Language: | English |
திரைப்பட விழாக்களுக்குத் தயாராகும் ஒரு படைப்பாளி இந்த வளர்ச்சிகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு தேவையான தொழில் நுட்ப அப்டேட்களைச் செய்துகொள்வது மிக மிக அவசியம். நான் கிரியேட்டிவ் அம்சம் ஒன்றையே பிடித்துக்கொண்டிருப்பேன் தொழில் நுட்ப வளர்ச்சிகளைக் கண்டுகொள்ளவே மாட்டேன் என்றால் அடுத்த வரும் நூறு வருடங்களுக்கும் நம்மூர் சினிமாக்கள் குறை பிரசவக் குழந்தையாகத்தான் நீடிக்க வேண்டியிருக்கும் அல்லது அடுத்தவனுடைய பரிட்சை தாளை எட்டிப் பார்க்கும் திருட்டு மாணவனாக.
திரைப்பட விழாக்களில் பங்குபெற்று விருதுகள் வாங்கிய திரைப்படங்களின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அந்தத் திரைப்படங்களின் கதை கதாபாத்திர விளக்கங்களைச் சொல்லும் அபத்தப் போக்கை நிச்சயமாக இந்தப் புத்தகத்தில் நீங்கள் எதிர் பார்க்க முடியாது. கேட்டகிரி ஏ என்று அழைக்கப்படும் மேஜர் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் கடந்த ஆறு வருடங்களில் விருதுகள் பெற்ற திரைப்படங்களில் இருந்து ஒரு திரைப்படத்தைத் தேர்வு செய்து அந்தத் திரைப்படத்தின் திரைக்கதை உத்தியை (திரி ஆக்ட், மினிமலிசம்) விளக்கியிருக்கிறோம்.இதன் மூலம் எப்படியான திரைப்படங்களை மேஜர் திரைப்பட விழாக்கள் தங்களுடைய நிகழ்வுகளில் தேர்வு செய்து விருதுகள் வழங்குகின்றன என்கிற புரிதல் ஏற்பட உதவியாக இருக்கும் என்பது எங்களின் நம்பிக்கை.
திரைப்பட விழாக்களின் வரலாறு ஐரோப்பிய திரைப்பட விழாக்களிடம் இருந்தே தொடங்கினாலும் திரைப்பட விழாக்களில் பங்குப்பெற்று விருதுகள் பெற்ற திரைப்படங்களின் திரைக்கதை உத்திக்கள் குறித்து பேசும்போது Sundance மற்றும் Toronto திரைப்பட விழாக்களை முதலில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இவைகள் திரைக்கதை மற்றும் திரைப்படமாக்கால் தொழில் நுட்பங்களில் நடத்தப்படும் சோதனை முயற்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால். ஐரோப்பிய திரைப்பட விழாக்களான Berlin, Venice, Rotterdam திரைப்பட விழாக்கள் டிரிப்பில் ஏ (Triple A) என்று அடையாளப்படுத்தப்படும் ஆர்ட், ஓட்டர், அவன்ட்-கார்ட் (Art, Auteur, Avant-Garde) முறையில் அமைந்த திரைப்படங்களுக்கு முன்னுரிமை தருவதால் அவைகளை அடுத்தும் சொல்லியிருக்கிறோம். Cannes திரைப்பட விழாவைக் குறித்த பரவலான அறிமுகம் இங்கே இருப்பதாலும் ஆஸ்கார் விருது விழாவைப் போலவே கேன் திரைப்பட விருது விழாவையும் பின் தொடரும் போக்கு இருப்பதாலும் அந்த திரைப்பட விழாவுக்கான உதாரணம திரைக்கதை உத்தியை குறித்து இந்த புத்தகத்தில் பேசவில்லை.