Author: | Varshini Tripura, Naveena Alexander | ISBN: | 1230001951790 |
Publisher: | Andhazdhi | Publication: | October 5, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Varshini Tripura, Naveena Alexander |
ISBN: | 1230001951790 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 5, 2017 |
Imprint: | |
Language: | English |
எடிட்டிங்கைப் பொறுத்த வரையில் முக்கியமான சில எடிட்டிங் கருவிகளை – இங்கே கருவிகள் என்று நாங்கள் அர்த்தப்படுத்துவது உத்திகளை - அடிப்படையாக வைத்துக்கொண்டு (உதாரணமாக ஜம்ப் கட், பெர்லள் கட், கட்டிங் ஆன் ஆக்சன்) அவைகள் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் திரைப்படங்களை எடுத்துக்கொண்டோம். முதலில் அந்தத் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த எடிட்டிங் கருவிகளைக் குறித்த விளக்கத்தைக் கொடுத்துவிட்டுப் பிறகு அந்தக் கருவி அந்தத் திரைப்படங்களில் எப்படிக் கையாளப்பட்டிருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறோம்.
கேமிராவைப் பொறுத்த வரையில் லைட்டிங், கம்போசிஷனில் அதிகக் கவனம் செலுத்தி அதன் அடிப்படையில் திரைப்படங்களைத் தேர்வு செய்து அது குறித்துப் பேசியிருக்கிறோம். நாங்கள் எழுதி வரும் சினிமா தலைப்பிலான புத்தகங்கள் அனைத்தும் இண்டி (Independent Filmmakers) படைப்பாளர்களை மனதில் கொண்டு எழுதப்படுவதால் இந்தப் புத்தகத்தையும் எத்தகைய சந்தேகமும் இல்லாமல் அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். மேற்கில் இண்டி திரைப் படையாளர்களுக்கு வழி காட்டும் புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றன. நம்மிடையே இண்டி படைப்பாளி என்கிற சொற்ப்பதத்தை ஒன்றிரண்டு வார்த்தைகள் அளவில் பயன்படுத்துவதற்குக் கூடப் புத்தகங்கள் கிடையாது.
ஒரு திரைப்படம் இப்படி இருக்கிறது அப்படி இருக்கிறது என்று திரையில் ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டக் காட்சிகளின் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை எடுத்து வைத்துக்கொண்டு வார்த்தைகளில் வடை சுட்டுக்கொண்டிருப்பது நிச்சயமாக நம்முடைய திரை இரசனையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லப்போவதில்லை. போதா குறைக்குத் திரையில் அழகியல் என்று கிளம்பியிருக்கும் கூட்டமும் தனி. திரையில் காட்டப்படும் கதை மற்றும் அழகியலைக் குறித்துப் பார்வையாளனுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே இந்தச் சல்லியடிப்பு நிகழ்ச்சி என்று இதற்கான விளக்க உறையும் தரப்படுகிறது.