Author: | Naveena Alexander | ISBN: | 1230001951622 |
Publisher: | Andhazdhi | Publication: | October 4, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Naveena Alexander |
ISBN: | 1230001951622 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 4, 2017 |
Imprint: | |
Language: | English |
வழமையான சூழலியல் புத்தகங்களைப் போல குறிப்பிட்ட ஒரு சுற்று சூழல் கேட்டை மாத்திரம் எடுத்துக்கொண்டு அது தொடர்பான விசயங்களை மட்டுமே ஒரு புத்தகம் முழுவதிலும் பேசாமல் ஒரே புத்தகத்தில் சூழலியல் பிரச்சனை குறித்த விரிவான அதே சமயத்தில் ஆழமான பார்வையை கொடுக்கும் புத்தகமாக இதை எழுதுவது என்கிற முடிவுடன்தான் இந்தப் புத்தகத்தை எழுத உட்கார்ந்தேன்.
கடந்த ஒரு சில பத்தாண்டுகளில் நம்முடைய செயல்பாடுகளின் மூலமாகப் பூமியின் சுற்றுச் சூழலையும் அதன் மற்ற உயிரினங்களையும் எப்படி அழிவின் விளிம்பிற்குத் தள்ளிக்கொண்டிருக்கிறோம் என்று சுழலியில் பிரச்சனையில் நம்முடைய பார்வையை மிக குறுக்கி கொண்டு பார்ப்பதைவிட கற்காலம் தொடங்கி பூமியின் இயற்கை வளங்களின் மீது எப்படியான பாதிப்புக்களை பல ஆயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தி வந்திருக்கிறோம் என்று புரிந்துகொள்வது சுற்றுச் சூழல் பிரச்சனையைப் பரந்த அளவில் அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.
சுற்றுச் சூழல் பாதிப்பின் பல கன்னிகளில் ஒன்றாக இருக்கும் ஒரு பிரச்சனையை மாத்திரம் எடுத்து வைத்துக்கொண்டு அதற்கான தீர்வுகளை மாத்திரம் நோக்கிச் செல்வது பாதிப்பின் மொத்த உருவத்தையும் குறைத்து மதிப்பிடுவதாகிவிடும். இன்றைய சுற்று சூழல் பாதிப்பு என்பது பல துளைகள் விழுந்த மிகப் பெரிய கப்பலுக்கு நிகரானது. துளைகளில் ஒன்றை மாத்திரம் அடைத்துவிடுவது ஒட்டு மொத்த கப்பலும் மூழ்குவதிலிருந்து தடுத்து நிறுத்திவிடுவதாகாது. பூமி தானாகவே அதன் செயல்பாடுகளின் வழி அழிவை நோக்கிச் செல்லவில்லை நம்முடைய செயல்பாடுகளின் வழியாகவே அதன் விருப்பத்திற்கு மீறி அது அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அழிவு என்றவுடன் பூமி துண்டு துண்டாக சிதறிவிடும் போலும் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம். பூமி அழியப்போவதில்லை. அதன் உயிரினங்கள் மாத்திரமே அழிந்துகொண்டிருக்கின்றன மனிதனின் வளமான வாழ்க்கை என்கிற ஒற்றைக் கூப்பாட்டின் காரணமாக. பூமி இதற்கு முன்பு ஐந்து பெறும் உயிரின அழிப்பு கட்டங்களை கடந்து வந்திருக்கிறது. அந்த அழிப்புக்களில் அதன் உயிரினங்கள் மாத்திரமே அழிந்தனவே ஒழியப் பூமி அதன் இயல்பு படியேதான் அது தோன்றியது முதல் இருந்து வருகிறது. முன்பு நிகழ்ந்த பேரழிவுகளுக்கு பல புற காரணிகள் இருக்க இப்போது மனிதன் தொடங்கி வைத்திருக்கும் ஆறாம் பேரழிவிற்கு முதலும் இறுதியுமான காரணம் மனிதன் மாத்திரமே.